விழாவிற்கு முன்னாள் துணைவேந்தர் அவிநாசி லிங்கம் நிகர் நிலை பல்கலைக்கழகம் கே. குழந்தைவேலு விழாவிற்கு தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளியின் செயலாளர் டாக்டர் கே ஆர் தில்லைநாதன் விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி குழு உறுப்பினர் கே ஆர் வெங்கட் சாமி விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
சத்தி குழுமம் தலைவர் மாணிக்கம் பவள விழா நுழைவாயிலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் பேசுகையில், மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார். முன்னாள் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே ரமணிதரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது - இந்த பள்ளியை 1948 ஆம் ஆண்டு கே எஸ் சுப்புணன் கவுண்டர் இந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். அன்றைய காலகட்டத்தில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு வழங்கினார். அவருக்குப் பின் மத்திய உள்துறை இணை அமைச்சர் கே எஸ் ராமசாமி கவுண்டர் பள்ளியை மேலும் விரிவுபடுத்தினார்.
120 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்த பள்ளி சுமார் 2500 பேர் இன்று படித்து வருகிறார்கள். கல்வியை மேன்மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் 36 ஆயிரம் பள்ளிகளை தமிழகம் முழுதும் திறந்தார். அவர் வழியிலே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காகவே 1984 இல் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் - என்று கூறினார்.
மேலும் நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், ஒன்றிய குழு தலைவர் மௌலீஸ்வரன், கோபி நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், முன்னாள் வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வக்கீல் முத்துசாமி, பொம்மநாயக்கன்பாளையம் தலைவர் சமூகத்தரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.