Type Here to Get Search Results !

அக்னி ஸ்டீல்ஸ் சமூக பொறுப்பு நிதி ரூ.50 லட்சத்தில் அரசு வகுப்பறை கட்டிடங்கள், நீர் தேக்க தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

ஈங்கூரில் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.50 லட்சத்தில் அரசு வகுப்பறை கட்டிடங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈங்கூர் ஊராட்சியில் அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவுற்று அதனை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈரோடு எம் பி  கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, அக்னி ஸ்டீல்ஸ் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ்(சிஎஸ்ஆர்) ஈங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.12.03 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையினையும், கவுண்டனூரில் ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையினையும், நல்லமுத்தாம்பாளையம், சரவம்பதி புதூர், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் தலா ரூ.6.49 லட்சம் மதிப்பீட்டில கட்டப்பட்ட சுமார் 30ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியனி்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர் மணிஷ்,  சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, செயல் இயக்குநர் சக்தி கணேஷ், துணைத் தலைவர் ஜெயக்குமார், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் விஜயா, பெருந்துறை தாசில்தார் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.