ஈரோடு, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னிமலை காவல் நிலையம் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. சரவணன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் கலந்து தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சுமார் மூன்று மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
சிறப்பாக செயல்பட்டு பல்வேறு பகுதிகளை சுத்தம் செய்த மாணவ, மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.