ஈரோட்டில் அரச்சலூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அனைத்து இந்து சமய திருக்கோயில்கள் நலச்சபை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரதிய சந்த் சமிதி தமிழ்நாடு தலைவர் கோவை மகா சமஸ்தானம் மஹா ஸ்ரீ ஸ்ரீ யுக்தேஸ்வர் சுவாமிகள், இந்து திருக்கோவில் கூட்டமைப்பு தமிழக செயலாளர் கொல்லிமலை சிவ அகோரி மணிகண்ட சுவாமிகள்,
இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் ஜி.
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தினேஷ் குமார், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் ராஜசேகர் பாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக
அனைத்து இந்து சமய திருக்கோயில்கள் நலச் சபையின் தேசிய தலைவர் மற்றும் நிறுவனர் விக்ரம் ஜி கலந்து கொண்டார். மேலும் அனைத்து இந்து சமய திருக்கோயில்கள் நலச்சபை தமிழ்நாடு மாநில கெளரவத் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன்
மற்றும் அனைத்து இந்து சமய திருக்கோயில்கள் நலச் சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.