பள்ளி தாளாளர் சரஸ்வதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்களையும் பொதுமக்களையும் வரவேற்று பேசினார். முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல் சீரமைப்பு மருத்துவர் புவனேஸ்வரன், பொது மற்றும் சர்க்கரை இருதய நோய் மருத்துவர் அப்புராஜ், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் மலர்விழி, கண் மருத்துவர் டாக்டர் ஜீவா, எலும்பு மருத்துவர் டாக்டர் எஸ் சி பிரகாஷ், சித்த மருத்துவர் டாக்டர் பிரபாகரன், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் பி மனோஜ் , தோல் மருத்துவர் டாக்டர் சுகந்தி, காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் சேவை மனப்பான்மையோடு செய்தார்கள்.
நிகழ்ச்சி நடத்தியதற்காக பள்ளி தாளாளருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.