ஈரோடு, பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஈரோடு ரோடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் உத்திரவின் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான சமூக கூட்டம், கணக்கெடுக்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.சி.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சென்னிமலை, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், அவல்பூந்துறை, அரச்சலுார், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நசியனூர், சித்தோடு, பள்ளபாளையம் உள்ளிட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், வரி வசூலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சமூக பரப்புரையாளர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.ப. மணிகண்டன், மகளிர் திட்ட இயக்குநர் திரு.நித்தியானந்தம், துப்புரவு ஆய்வாளர் அந்தியூர் பேரூராட்சி குணசேகரன், அவினாசி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அவல்பூந்துறை இளநிலை உதவியாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் பெருந்துறை வட்டார சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சமூக பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி வழங்கப்பட்டது.