நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் திரு .P .வெங்கடாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.தங்கவேல் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல அண்ணா பல்கலைகழகத்தின் மேலாண்மைத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். பி. விக்ரமன் அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் மேம்பாட்டு அமைப்பு பற்றி பேசினார்.
இக்கருத்தரங்கம் எட்டு பிரிவுகளாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் பேசினார்கள் .
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் திரு. கே.சி. கருப்பணன் அவர்கள் கலந்துகொண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மேலாண்மை பேராசிரியர் மற்றும் தலைவி டாக்டர். எஸ். சத்யசுந்தரி அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இறுதியாக நன்றியுரை வழங்கினார்.