ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தூய்மைப்பணி மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் கவிதா ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
அதன் பின்னர், தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில், ஈரோடு அரசு மருத்துவமனை வளாக பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் முழுவீச்சில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு அந்த பகுதியை தூய்மைப் படுத்தினர்.