ஈரோடு, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு 'இணைய பாதுகாப்பில் நிகழ்நேர தாக்கங்கள்' என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. விரிவுரையாளராக டாக்டர் ஆர்.சுந்தர் ராஜ் கலந்து கொண்டார். தற்போதைய உலகில் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
நிஜ வாழ்க்கை பிரச்சனைகளுடன் சைபர் செக்யூரிட்டி பற்றி ஆழமாக விளக்கினார். டாக்டர் சுந்தர் ராஜ் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த விரிவுரை இருந்தது. கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன் அவர்களின் வழிகாட்டலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.