கோபி டாஸ்மாக் பகுதியில் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்ற மகேஷ் @ மகேஸ்வரன் என்பவர் கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்தவர்.
தனது செலவிற்காக கோபி பகுதியில் பணம் கேட்டு மிரட்டி அடாவடியில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் குப்பைமேடு டாஸ்மார்க் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும்
சந்தோஷ் என்ற நபரிடம் தான் பெரிய ரவுடி என்று கூறி மது அருந்த பணம் கேட்டு செல்போனை பறித்து சென்றுள்ளார். மேற்படி நபர் கொடுத்த புகாரின்பேரில் கோபி காவல் ஆய்வாளர் சண்முகவேலு அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார் .
மேற்படி ரவுடி மகேஸ்வரன் மீது மேட்டூர், ஓமலூர், மலையம்பாளையம், கோபிசெட்டிபாளையம், சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோபி காவல் நிலையத்தில் ரவுடி குற்ற பதிவேடு பதிவு செய்யப்பட்டு கண்காணித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி ரவுடி மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.