நீட் விலக்கு கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெரும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் அறிவுரையின்படி கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்த நிலையில்,
மாபெரும் கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி சத்தியமங்கலத்தில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமை கழக மக்கள் தொடர்பு பிரிவு மாநில இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அனைவருக்கும், தங்கள் பகுதிகளில் தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் அஞ்சல் அட்டைகளை மாவட்ட செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட , கழக நிர்வாகிகள் ஒன்றிய, நகரக், கழக செயலாளர்கள் நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.