ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னிமலை வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் சென்னிமலை காவல் உதவி ஆய்வாளர் பிரியா, சென்னிமலை தீயணைப்பு துறை அதிகாரி திரு.முத்துசாமி, வனத்துறை அதிகாரி திரு.முருகன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர். ராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் இணைந்து சுமார் ஐம்பது மரக்கன்றுகள் நட்டுள்ளனர். மேலும் மரங்களை பராமரிப்பு செய்து வளர்க்க உறுதிமொழி ஏற்றனர்.