Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் குளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம்,  மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை (நேற்று) காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குளூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, இணை இயக்குநர்கள் முருகேசன் (வேளாண்மை), பழனிவேல் (கால்நடை பராமரிப்பு), துணை இயக்குநர்கள் மரகதமணி (தோட்டக்கலைத்துறை), சாவித்திரி (வேளாண் விற்பனை), மகாதேவன் (வேளாண் வணிகம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசர், சண்முகபிரியா, குளூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், மொடக்குறிச்சி வட்டாட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.