கேரளா மாநில பொதுமக்கள் சார்பில் ஈரோட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மகாபலி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சிநேகம் வீடு நிறுவனர் எம்.சி.ராபின் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மகாபலி மன்னர் வேடம் அணிந்து சென்றனர். ஈரோடு கணபதி நகரில் தொடங்கிய ஊர்வலம் நசியனூர் ரோடு வழியாக சென்று வெட்டுக்காட்டுவலசு பகுதியில் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரளா மாநிலம் ஆலத்தூர் தொகுதி எம்.பி. ரம்யா ஹரிதாஸ் கலந்து கொண்டு பேசினார். இதையொட்டி பெண்கள் அத்தப்பூ கோலம் போட்டு மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், ஓணம் விருந்தும் நடைபெற்றது.