காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தின் சார்பாக அதன் நிறுவனத்தலைவர் சதா நாடாரின் அறிவுறுத்தலின்படி, காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராயப்பன் தலைமையில், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் சுரேஷ் நாடார், தெலுங்கானா மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய சிவா நாடார், கொங்குமண்டல இளைஞர் அணி அமைப்பாளர் நவீன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.