இந்த விழிப்புணர்வு பேரணியானது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி காலிங்கராயன் இல்லத்தில் முடிவுற்றது.
இந்த பேரணியில் ஈரோடு மாவட்ட சமுகநலத்துறை அலுவலர் சண்முகவடிவு, ஈரோடு மாநகர பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் திரு. Dr. பிரகாஷ், C D வெங்கடேஸ்வர குமார், அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார், வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் மலர்கொடி, செல்வா சேரிடபிள் பாரதி, ஈரோடு சிறகுகள் விமல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அட்சயம் அறக்கட்டளை தன்னார்வலர்கள், KSR கல்லூரி மாணவர்கள் மற்றும் ஈரோடு சிறகுகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் முதியவர்களை பேணி பாதுகாப்போம், முதியவர்களை அரவணைப்போம், முதியவர்களை கிழவன் கிழவி என்று அழைக்காமல் மரியாதை நிமித்தமாக அழைப்போம் என்றும், வயதான பெற்றவர்களை அரவணைப்போம், முதுமையை காக்கும் ஒரே ஆயுதம் இளமை என்றும், முதியவர்களிடம் அன்பு செலுத்துவோம் என்றும், பதாகை மற்றும் கோசங்களுடன் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
முன்னதாக அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார் முதியோர்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.