ஈரோடு, பெருந்துறையில் உள்ள தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் கீழ் இயங்கி வரும் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியின் (B.N.Y.S.) 2023-2024 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி 04.10.2023 புதன்கிழமை அன்று கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள காலிங்கராயன் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திரு. A.வெங்கடாச்சலம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் உறுப்பினர் திரு.PC.பழனிசாமி அவர்கள் தலைம உரை வழங்கினார்.
தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் தலைவர் டாக்டர். K.R.குமாரசாமி அவர்கள், செயலாளர் திரு.P.சத்தியமூர்த்தி அவர்கள். பொருளாளர் திரு.KV.ரவிசங்கர் அவர்கள், கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு. A.K. இளங்கோ அவர்கள், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.PD.தங்கவேல் அவர்கள், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் திரு.R.M.தேவராஜா அவர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.VK.முத்துசாமி அவர்கள், திரு.P.சச்சிதானந்தம் அவர்கள், திரு.K.கார்த்திகேயன் அவர்கள் மற்றும் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்கள், டாக்டர்.V.மருதராஜ் அவர்கள் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
கொங்கு இயற்கை மற்றும் போகா மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர்.பிரதாப்சிங் அவர்கள் அறிமுக குறிப்பு வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மருத்துவர் P.யுவராஜ் பால் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் பூனே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் இயற்கை மருத்துவத்தின் எதிர்கால வேலைவாய்ப்பை குறித்தும் தேசிய அளவில் இயற்கை மருத்துவர்களின் தேவை குறித்தும் விரிவாக பேசினார். மேலும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த வழங்கி வரும் நிதி உதவி குறித்தும் விவரித்தார்.
இதனை தொடர்ந்து கௌரவ விருந்தினர் மருத்துவர் BS.நிவேதா பேசுகையில் பிராணயாமம், மண்சிகிச்சை, நீர்சிகிச்சை போன்ற இயற்கை மற்றும் யோகா மருத்துவம் மூலம் பல நோயாளிகளின் நோயை குணப்படுத்தியதாக குறிப்பிட்டார். மேலும் இந்த படிப்பைப் படிக்கும் வாய்ப்பு புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும் என்றும் ஆழமாக கூறினார்.
அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் அதிக மதிப்பெண் பெற்று இக்கல்லூரியில் சேர்ந்த R.திரனிஷா மற்றும் P.அனுமாலிகா மாணவிகளுக்கு தங்கநாணயம் பரிசாக கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியின் தாளாளர் திரு. A.வெங்கடாச்சலம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் திரு.PC.பழனிசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 450 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதில் சில மாணவர்களும் பெற்றோர்களும் இந்த கல்லூரியை தேர்வு செய்ததிற்கான காரணத்தையும் மற்றும் கல்லூரி சார்ந்த மருத்துவமனை வசதிகள் குறித்தும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். மேலும் எல்லா கல்வி ஆண்டிலும் ஒவ்வொரு வகுப்பிலும் பல்கலைகழகத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஐந்து மாணவர்களுக்கு தங்களது அறக்கட்டளை சார்பில் கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியை ஊக்கத்தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இக்கல்லூரியில் செயல்படும் மருத்துவமனையில் தினமும் நூற்றிற்கும் மேற்பட்ட வெளிபுற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்வதாகவும் விரைவில் 100 படுக்கை வசதிகொண்ட உள்நோயாளிகள் பிரிவும் துவங்க உள்ளதாக கல்லூரியின் தாளாளர் திரு. A. வெங்கடாச்சலம் அவர்கள் கூறினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். ராஜரத்தினம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.