கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் எவ்வாறு சுகாதார முறையில் பலகாரம் தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பொருட்களில் எந்தவித கலபடமின்றியும், பயன்படுத்திய எண்ணெய் பொருட்களை திருப்ப பயன்படுத்த கூடாது என்றும் தரமான மூலப் பொருட்களை கொண்டுதான் பொருட்கள் தயாரிக்க வேண்டும் எனவும், உரிய அனுமதி நகராட்சியிலும், உணவு பாதுகாப்பு துறையிலும் பெற்று பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என அறியுறுத்தப்ப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் N.R.நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்கள் முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தை வேல், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழ ராஜ் ஆகியோர் உணவுப் பொருட்களை எவ்வாறு சுகாதாரமாகவும் தரமானதாகவும் தயார் செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர்கள் திரு. நிருபன் சக்கரவர்த்தி, சௌந்தரராஜன் மற்றும் கோவை நகராட்சி பகுதியில் பலகாரம் உற்பத்தி செய்யும் கடை உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர்.