கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் சைன்ஸ் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியில் உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி 30.10.2023 திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பவானி மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை பேரணி நடைபெற்றது .
இந்நிகழ்வினை காவல்துறை உதவி ஆய்வாளர் ரகுநாதன் அவர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மேலும் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆக்குபேஷனல் தெரபி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.