கோயம்புத்தூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாக ஆடிடோரியத்தில்,
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் 7-ம் ஆண்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற சிபிஐ டிஎஸ்பி
வெள்ளிங்கிரி தலைமை
தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன், நடிகர் சிவகுமார், சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர். பி.சி. துரைசாமி, டாக்டர். சாந்தி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இவ்விழாவில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் பயிலும் காவல்துறையை சேர்ந்த குடும்ப மாணவ, மாணவியர்கள் 25 பேருக்கு
தலா ரூ.25,000 வீதம், ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கல்வி ஊக்கத்தொகை வழங்கியது.
- செய்தியாளர் இராமச்சந்திரன்