உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் பூந்துறை ஊராட்சியில் தலைவர் பி.பேபி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் எஸ்.தினகரன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி செயலர் தியானேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- செய்தியாளர் இராமச்சந்திரன்