முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடும் விதமாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் 12 குலுக்கல் அமைக்கப்பட்டு, அதில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் முத்தமிழ் தேர் வாகனம் தமிழகம் முழுவதும் சென்று வருகிறது. அதன்படி ஈரோட்டில் முத்தமிழ் தேர் வாகனத்தை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஈரோட்டில் வரவேற்றார். முன்னதாக ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளி அருகே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்திற்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவுப் பொருட்களை கண்டு ரசித்தனர்.
முத்தமிழ் தேருக்கு அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் வரவேற்பு...
November 28, 2023
0