தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் மாவட்ட தலைவருக்கான தேர்தலில் என்.நந்தகோபால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் வீரப்பன்சத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் இச்சங்கம் தமிழக அரசு 2020-2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் சங்கமாகவும், சிறந்த நெசவாளர்களுக்கான விருதும் பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து கைத்தறி சங்கங்களின் சம்மேளனத்தில் மாவட்ட இயக்குநராகவும், ஈரோடு மாவட்ட நூல் மற்றும் சாயக் கூலி நிர்ணயக்குழு கமிட்டி உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு ஜவுளி ஆலோசனை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, ஈரோடு செங்குந்த திருமண மண்டபத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், பாக்ஸிங் அகாடமி துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் அனைத்து மளிகை பொருட்கள். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளையும் வழங்கியுள்ளார்.
செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவராக நாச்சிமுத்து முதலியார், ஜெ.சுத்தானந்தம், ராணா ஆகியோர் வரிசையில் தற்போது என்.நந்தகோபால் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தகோபால் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், செங்குந்த முதலியார் சமுதாயத்தை சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மற்றும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- செய்தியாளர் இராமச்சந்திரன்