திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டில் தமிழகமெங்கும் இருந்து இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாடு வெற்றி பெற தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் சென்று அனைத்து மாவட்டங்களிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 3ல் காலை ஊட்டியிலும், மதியம் கோவையிலும், டிசம்பர் 4ல் காலை திருப்பூரிலும், மதியம் கரூரிலும் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
கரூரில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் அவர்கள், ஈரோடு சட்டக்கல்லூரி இணை செயலாளர் அருண் பாலாஜி அவர்கள், ஸ்ரீ சாய் சிந்து இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட்-ன் துணைத்தலைவர் கிஷோர் ஆகியோர் சாய் சிந்து பவுண்டேசன் சார்பாக ரூ.10 இலட்சம் மாநாட்டு நிதி வழங்கினார்கள். அருகில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உடனிருந்தார்.