கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி சார்பில், ஆரோக்கியத்தை காக்கும் விதமாக மிதி வண்டி பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி சார்பில் 100 கிலோ மீட்டர் தூர மிதிவண்டி பயணம் நடைபெற்றது,
இந்தப் பேரணியை லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மிதிவண்டி பேரணியானது, கரட்டடிபாளையத்தில் உள்ள கல்லூரி முன்பு தொடங்கி கோபிபாளையம், அழுக்குளி, குருமந்தூர், நம்பியூர், கடத்தூர், அரசூர், அரியப்பம்பாளையம் வழியாக சத்தியமங்கலத்தில் முடிவடைந்து
மீண்டும் அடுத்த நாள் சத்தியமங்கலத்தில் இருந்து தொடங்கி கேஎன் பாளையம் வழியாக கோபி பேருந்து நிலையத்தில் வந்தடைந்து விழிப்புணர்வு பேரணையானது நிறைவடைந்தது.