Type Here to Get Search Results !

காசிபாளையம் பேரூராட்சியில் 2 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்ட பணிகள்...

ஈரோடு மாவட்டம், 
T.N.பாளையத்தில் காசிபாளையம் பேரூராட்சியில் பேராசிரியர் அன்பழகன் அவர்களது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள்  மற்றும் T.N.பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் எம். சிவபாலன் ஆகியோர் தலைமையில் 2 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,  பவானி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு அமைத்து,  குடிநீர் விஸ்தரிப்பு செய்து,  குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு, பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

மேலும், பள்ளி மாணவர்களுக்கான பேவர் பிளாக் தரைத்தளம் அமைத்து  பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டது. 

 உடன், பேரூர் கழக செயலாளர் M.M.பழனிச்சாமி, பேரூர் மன்றத் தலைவர் தமிழ்செல்வி வெற்றிவேல், பேரூர் மன்ற துணைத் தலைவர் ராமசாமி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சங்கர் சிவக்குமார், மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் பேபி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெ. யோகேஷ்வரமூர்த்தி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் கார்த்திகேயனி, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.