8 நாட்கள் நடைபெறும் இந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகளில் இரண்டாவது நாளில் நேர்கோட்டுபாதை கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டி.என்.பாளையம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மழைக்காலத்திற்கு முன், மழைக்காலத்திற்கு பின் என இரண்டு முறை வன விலங்குகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் மழைக்காலத்திற்கு பிந்திய கணக்கெடுப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த மழைக்காலத்திற்கு பிந்தய கணக்கெடுப்பு பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
வனச்சரக அலுவலர் மாரியப்பன் அவர்கள் தலைமையில், 6 பேர் கொண்ட குழு நேர்கோட்டுபாதை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகளின் போது நேரில் பார்க்கும் வனவிலங்குகளை வைத்தும் அதன் எச்சங்களை அளவீடு செய்தும் மற்றும் கால் தடங்களை வைத்தும் கணக்கெடுக்கும் பணிகளில் வனதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு, ஊண் உண்ணிகளின் கணக்கெடுப்பு, தாவரங்களின் கணக்கெடுப்பு போன்ற பணிகள் நடைபெறும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.