ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி சந்திரசேகர் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோபி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ கே ஏ செங்கோட்டையன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலகூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி, கோபி ஒன்றிய அதிமுக செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கந்தசாமி, து.தலைவர் சீனிவாசன், அதிமுக கட்சி நிர்வாகிகள் விஸ்வநாதன், சசிகலா, கே.கே.சென்னியப்பன், பாரதி, சுப்பிரமணியம், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.