ஈரோடு, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் பெருந்துறையில்
‘ஃபிட் இந்தியா’ நடைபயணம் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் சுமார் 150 மாணவ-மாணவிகள் கலந்து நடைபயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்வை பெருந்துறை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லூரி முதல்வர் முனைவர் ராமன் அவர்களோடு இணைந்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
அன்றாட வாழ்வில் நடைபயணம் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் சார்பில் பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்தான விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமதி சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் திருமதி பிரியா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்களும் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.