சேலம் மாவட்டம் ஊஞ்சப்பாளையம் அருகேயுள்ள கோனேரிப்பட்டியில் புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கார்த்திகை அம்மாவாசையையொட்டி
சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் வெப்படை ஜெகநாதன், பாலாமணி மற்றும்
சண்முகம், சரஸ்வதி ஆகியோர் புடவைக்காரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விஷேச பூஜை செய்தனர்.
இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.