நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 14.12.2023 இன்று ஈரோட்டில் இலவச சட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது .
ஈரோடு பஸ் நிலையம் எதிரே உள்ள நல்லி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்த இம்முகாமை நாடாளும் மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் தனலட்சுமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர், உறுதிமொழி ஆணையர் மற்றும் நிறுவனத் தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்கள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமைகள் சட்டம், அரசியல் அமைப்புச் சட்டம், பட்டா மாறுதல், சர்வே சட்டம் உட்பட பல்வேறு சட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்டங்கள் குறித்த இலவச சட்டப்பயிற்சி மற்றும் இலவச சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு
சட்டபயிற்சிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் சசிகுமார், மாநில அமைப்பாளர் பாலகுமார், கொள்கை பரப்பு செயலாளர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சார்லஸ் பேரின்பன், துணை செயலாளர் கோபி, துணை தலைவர் சீனிவாசன், ஈரோடு மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஹரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈரோடு சத்தி ரோட்டில் நாடாளும் மக்கள் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.