ஈரோடு மாவட்ட ஸ்டீல் பேப்ரிகேஷன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் 17.12.2023 இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டம் ஈரோடு பழையபாளையம் சிவில் என்ஜினீயரிங் அறக்கட்டளை ஹாலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு அதன் தலைவர் சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார்.
செயலாளர் சசிகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் செங்கோடன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் செந்தில் குமார் அவர்கள், தமிழ்நாடு பாண்டிச்சேரி சிவில் என்ஜினியர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில், பில்டிங் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் முருகேசன், துணை பொருளாளர் வேலுமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்.