மாதவ சேவா சமிதி சார்பில் சக்தி சங்கமம் என்ற பெயரில் மகளிர் மாநாடு ஈரோடு முத்துமகாலில் 17.12.2023 நேற்று நடைபெற்றது.
இதில், மாதா அமிர்தானந்தமயி சீடர் சுவாமி நிரஞ்னாமிர்தப்ராண அவர்களின் ஆசியுடன் தொடங்கிய இந்த மாநாட்டுக்கு இந்து கல்வி குழுமம் துணைத்தலைவர் கீதா அருண்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
யத்தீஸ்வரி ஆனந்த பிரேம பிரிய அம்பா சிறப்புரையாற்றினார். சேவாக் சமிதி மாநில செயலாளர் சமூக ஆர்வலர் லதா ராஜன் நன்றியுரையாற்றினார்.
இந்நிலையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.