ஈரோடு மணிகண்டன் அன்னதான குழு சார்பில், ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில்
26 ஆம் ஆண்டு அன்னதான விழா
நடைபெற்றது. விழாவையொட்டி மண்டபத்தில் பதினெட்டாம்படி அமைக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கைக்கோளன் தோட்டத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு திருவிளக்கு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம், விழா நடக்கும் மண்டபத்தை அடைந்தது .இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை தொழில் அதிபர் சாஸ்தா அவர்கள் தொடங்கி வைத்தார். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை குருசாமி மனோகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.