அதையொட்டி சனி பகவானுக்கு சனி பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் பச்சை மலை முருகன் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சனிபகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் .
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் திருப்பணி குழு தலைவர் பி கே ஈஸ்வரன், முருக பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.