கோபிசெட்டிபாளையத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையுடன் இணைந்து பென்சனர் தின விழா கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோபி வட்டார கிளை தலைவர் ஜி. முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். கோபி வட்டார செயலாளர் பி. துரைசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கோபி வட்டார துணைச் செயலாளர் திருமதி பாலா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்கள். கோபி வட்டார துணைத் தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். உதவிக் கருவூல அலுவலர் (பொறுப்பு ) ச. கவிதா மற்றும் ஈரோடு தி ஐ பவுண்டேஷனின் தலைமை மருத்துவர் விஜய் குமார் ஆகியோர்
சிறப்புரையாற்றினார்கள்.
மாநில பொருளாளர் சா. ராமசாமி அவர்கள் மற்றும் கே. என். சரவணன் ஆகியோர், 70 மற்றும் 80 அகவை மூத்தோர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி இயக்க பேருரை ஆற்றினார்கள்.
சோமசுந்தரம் அவர்கள் ஏற்புரை ஏற்க, முன்னாள் அமைப்புச் செயலாளர் எஸ். ஆர். பழனிசாமி அவர்கள் நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்தார். கோபி வட்டார பொருளாளர் எம். ஆர். சண்முகம் அவர்கள் நன்றியுரை வாசித்தார்.
மேலும் இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பென்சனர்கள் கலந்து கொண்டனர்.