ஈரோட்டில் EVN ரோடட்டிலள்ள நிஷாந்த் மருத்துவமனை கடந்த 31 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் டாக்டர். சுமதி பத்மநாபன் அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி மருத்துவதுறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழக காவல்துறை இயக்குநர் (DGP) முனைவர். A.K. விஸ்வநாதன் அவர்கள் வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கவிதாலயம் ராமலிங்கம், சென்னை ஸ்ரீநிதி, ஸ்ரீ ராகவேந்திரா கண்மருத்துவமனை டாக்டர் எஸ்.எஸ். சுகுமார், காலேஜ் ஆப் பார்மஸி தலைவர் ஸ்பிக் தங்கமுத்து, எஸ்.வி.என். மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் மல்லி பெரியசாமி,
கொங்கு கலையரங்கம் தலைவர் டர்மரிக் சின்னசாமி, செயலாளர் ஆர். சுப்ரமணியம், பொருளாளர் ஹரிராம்சந்த்ரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.