ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தலைமையில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் எஸ். முகமது யூசுப், மண்டல தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர், எச். எம். ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சேவாதள தலைவர் குங்ஃபூ விஜயன் அவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர்களான ஈ. பி. ரவி, ஈ. ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாஜலம், வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி. எம். ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மாநில சேவாதள செயலாளர் எம். பேபி, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய்கண்ணா, காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாவட்ட துணை தலைவர் கே.என்.பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.