இந்தப் பேரணி ஊர்வலத்தை, மேற்பார்வை பொறியாளர் திரு. மாரியப்பன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் அனைத்து செயல் பொறியாளர்கள், எம் ஆர் டி உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், இள மின் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கோபி ஒத்தகுதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மழை காலங்களில் மின் கம்பங்கள் அருகே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மற்றும் மின்சாரம் சிக்கனம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மின்சார பணியில் ஈடுபடும்போது பாதுகாப்பாக இருப்பது குறித்தும் கூறப்பட்டது.