இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மையினர் துறை மாநில செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் இல்லா அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் துறை சார்ந்த அதிகாரிகள், சிறுபான்மை சமுதாய மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.