உலக தமிழ் ஜோதிடர்கள் மகாஜன சபை சார்பில் 12-வது ஜோதிட மாநாடு ஈரோட்டில் உள்ள தனியார் மண்டப அரங்கில் 16.12.2023 இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் அய்யம்பாளையம் அருள்வேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஈரோடு கோபு முன்னிலை வகித்தார்.
மேலும், ஜோதிடர்கள் மறையேந்தி, சென்னை சண்முகவேல், ரிஷிகேசவா, மனோ, விருதுநகர் சச்சிதானந்த பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு ஜோதிடம் பற்றி விரிவாக விளக்கிப் பேசினர்.
இந்த மாநாட்டில், ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஜோதிடர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாடு 2 வது நாளாக 17.12.2023 நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதில் பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கலந்து கொள்கிறார்.