சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு,
இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக கோபிசெட்டிபாளையத்தில்
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியானது நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே துவங்கி ல.கள்ளிப்பட்டி வழியாக கச்சேரிமேடு மார்க்கெட் சிக்னல் பகுதி வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
நிகழ்ச்சியில் கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல், பாபு இதாயத்துல்லா, ஈரோடு மாநகர இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் தலைவர் முருகேசன், நல சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.