முக்கிய தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர் முத்துராஜ், நகர செயலாளர் சங்கர்
மற்றும் பாபா சங்கர், சீதாராமன், கோடீஸ், ராஜசேகர் ஆகியோர் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.