தை 1 பொங்கல் திருநாளான (15.01.2024) இன்று, ஈரோடு மாவட்ட பிரஸ் மற்றும் மீடியா நலச் சங்க தலைவர் மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மேற்கு மண்டல தலைவர் தனஞ்ஜெயன் தலைமையில், ஈரோடு மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலையில்
ஈரோடு மாவட்ட 2024 பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் காலண்டரை மாண்புமிகு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கோவர்தனன், கணேசன், லீலா கிருஷ்ணன், இராமச்சந்திரன் மற்றும் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.