இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமியை வலியுறுத்தும் அரசாணை என் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் கடந்த 12.10.2023 இல் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் டிக்டோஜாக் உயர் மட்ட குழுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக் கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த EMIS உள்ளிட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் பி. செந்தில் ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர்
எம். மகாதேவ செல்வன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
மேலும் தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் B. அசர புனிஷா பானு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி தலைவர் அண்ணாதுரை, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி மாவட்ட துணைச் செயலாளர் கே எஸ் சுரேஷ் குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில மகளிர் அணி செயலாளர் கு. இ. ரமராணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.