செந்தமிழ் முற்றம் அமைப்பின் சார்பில் அதன் ஏழாவது ஆண்டு விழா 20.01.2023 அன்று, ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
கவிஞர் நாமக்கல் நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
உளியோசை சிற்றுளி கணேஷ் ராம் விழாப்பேருரை ஆற்றினார்.
இதில், செயலாளர் செந்தில் குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் கவிஞர் மூசா ராஜா ஜூனைதி அவர்கள் திட்ட உரை ஆற்றினார்.
மேலும், செயல் தலைவர் கருநல்பன்னீர்செல்வம், தாளாளர். கவிஞர். தாஜ் முஹ்ஹித்தின், கொங்கணாபுரம் தமிழ்ச்சங்க தலைவர் ஆ. மு. ஜெகநாதன், தமிழ் மன்னன் கவிஞர் இரகுநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், மருத்துவர் அருள் நாகலிங்கம், உளியோசை சிற்றுளி கணேஷ்ராம் ஆகியோருக்கு தமிழ்த்தாய் விருதினையும், மது ஒழிப்பு போராளி வி.சுந்தர், காருண்யா தொண்டு நிறுவனர் ஆறுமுகம் ஆகியோருக்கு சமூக நற்பணி விருதையும், ஆசிரியர். முனைவர் குணாளன், ஆசிரியை திருமதி து. பிரியா ஆகியோருக்கு நல்லாசிரியர் விருதினையும் செந்தமிழ் மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.
முன்னதாக வாழ்த்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், மேஜிக் தேவா அவர்களின் மந்திர தந்திர நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அன்பழகன் நன்றியுரை ஆற்றினார்.