ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் நடைபெற்ற 31 ஆவது தேசிய சப் ஜூனியர் 'Throw Ball' விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பெரிய கொடிவேரி பேரூராட்சி 6 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி.M. யுவராணி தளபதியின் மகன் D. தர்சன்
மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24 வது தேசிய அளவிலான உறைவாள் சண்டை பிரிவு மற்றும் ஏரோ ஸ்கொயர் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கங்கள் பெற்ற காசிபாளையம் சாமி ஸ்டுடியோ நாராயணன் அவர்களின் மகள் N. அனுதர்ஷினி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த விளையாட்டு வீரர்களை T.N.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம். சிவபாலன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கி அவர்களை சிறப்பித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர்களான M.M. பழனிசாமி (காசி பாளையம்), ஆறுமுகம் (பெரிய கொடிவேரி), பேரூர் மன்றத் தலைவர்கள் தமிழ்மகன் சிவா (பெரிய கொடிவேரி), தமிழ்செல்வி வெற்றிவேல் ( காசி பாளையம்) ஆகியோர் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.