ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியில் திமுக வெற்றி வேட்பாளரான
K. E. பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டி, ஈரோடு மாநகர் மாவட்ட தி.மு.க.-வின் மூத்த முன்னோடியும் தி.மு.க-வில் பொற்கிழி பெற்ற நாயகனுமான கா. பா. ஆறுமுகம் அவர்கள் தலைமையில் கடந்த 07.04.2024 -ம் தேதி வாக்கு சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் ஈரோடு மாநகராட்சி 42, 43 வந்து வார்டுகளில் உள்ள திருமகன் ஈ.வே.ரா வீதி (கச்சேரி வீதி), நக்கீரர் வீதி, மண்டப வீதி, பாரி ஓரி வீதி, காளமேகம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று ஒவ்வொரு வாக்களார்களையும் நேரில் சந்தித்து தமிழக அரசின் சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்தனர்.
முன்னாள் நகர மன்ற உறுப்பினர்
சு.ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தி.மு.க சட்டதுறையின் ஈரோடு தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெகதீஸ் குமார், டேவிட் முகமது குட், அரச்சலூர் தங்கவேலு, ஜீவானந்தம், மிஷின் மெக்கானிக் சுரேஷ், A.ஆனந்தன், ஆறுமுகம், டைலர் மணி (P.L.A.2 ), ராமகிருஷ்ணன், சாமி, காங்கிரஸ் தொண்டர் தங்கவேலு, ஜீவா, துணை செயலாளர் மாது (எ) மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டு
வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.