மருதுபாண்டியர்களின் வாரிசான மருது வம்ச அமைப்பின் நிறுவன தலைவர் P. சரவணன் அகமுடையாருக்கு அமெரிக்க குளோபல் அமைதி பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வாரிசுகள் மருது வம்சம் என்ற அமைப்பை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அகமுடையார்களை ஒருங்கிணைத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, அகமுடையர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறை போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கடந்த 5-ஆண்டுகளாக தொண்டாற்றி வருகிறது.
சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மருது வம்ச அமைப்பை பாராட்டும் வகையில் இவர்களின் தன்னலமற்ற சேவையை கருத்தில் கொண்டு புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் அமெரிக்கா குளோபல் அமைதி பல்கலைக்கழகம் சார்பில் மருது வம்சத்தின் நிறுவன தலைவரான ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்த சரவணன் அகமுடையாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
இந்த நிகழ்ச்சியில் மருது வம்ச நிர்வாகிகள், குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.