15.08.2024 இன்று, இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜெய் பேட்மிட்டன் கிளப் சார்பில் ஈரோடு ரயில்வே காலனி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஜெய் பேட்மிட்டன் கிளப்பின் தலைவர் திரு. மோசஸ் அவர்களின் தலைமையில் அதன் உறுப்பினர்களாகிய பலர் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இதில், திரு.தேவ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து, கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.